Question – கேள்வி  

Cheran Rudhramoorthy (trans. Anushiya Ramaswamy)


The moon, shredded, hangs on
the fence; midnight.
Yama’s messengers,
who rend lives,
tread on the falling leaves.

Demons buried in the well
in the corner of the backyard
brace to emerge now.

On this night that dissolves in grief,
without losing to slumber,
I pluck my heart and
place it on the table.
The table trembles from
the loud groans dripping with blood.

The heart cools
in the external breeze.
I begin my poem from where
I had stopped.

I have never been grappled
by a poem, like today.
This poem wandered about
in the open space for a long time.

The very beginning of the
poem is a question;
A question about
friends who were murdered,
friends who disappeared.

This poem, born out of
a question,
leaves me suddenly;
As unwoven words and
passion, unstructured by the brain,
outpour,
this poem departs—

It goes around the two-storey house
that lies in the dark,
unwashed even by the full moon;
angrily slams the ancient doors
now locked,
listens intently from beside
the tightened windows.

It melts near the blood stain
smeared on the outer wall,
searches the voices of grief
still clinging to the tall trees;
in the nights,
it follows footprints
on the seashore;
gets drenched in blood
amid the Pandanus thickets.

It wanders over the waves,
prodding the overturned corpses;
Looking for eyes among the
corpses without eyes,
faces amid the corpses
without face,
it is enraged.

It stops hesitantly on a
single slipper thrown
into the street,
the glasses tossed
on the doorstep,
the overturned bike lying
on the street corner.

It is puzzled, unable to comprehend
the reflection in the marble eyes of babies,
born after their father’s death;
carrying the tears of the mothers,
it stumbles and falls down.

Under the gallows,
above the graveyards,
in the corners of camps,
on the tables,
near the pen that is open now,
like before,
in the unfinished lines of a letter,
on the pictures hanging from the wall,
clothes scattered in the room,
the flowerless Portia trees,
the wet Palmyra,
on a single flower on the hair,
it spins on like a top.

In the wind and the expanse,
the closed iron doors,
guns that leak smoke,
the poem slams and asks,
what happened to our children?

நிலவு கிழிந்து தூங்குகிறது
வேலியில்
நள் யாமம்;
உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகளின் மேல்
நடந்து திரிகின்றனர்
உயிர் திருகும் எமதூதர்.

அடிவளவின் கிணற்றுக்குள்
காலம் காலமாய்ப் புதையுண்டு கிடந்த
பூதங்களும்
இப்போது சிலிர்த்துக்கொண்டு
கிளம்புகின்றன.

துயிலில் தொலையாது
துயரில் கரையும் இன்றைய இரவில்
இதயத்தைப் பிடுங்கி
மேசைமீது வைத்துவிடுகிறேன்
குருதி சொட்டச் சொட்டப்
பெருகும் அதன் ஒலிக் குமுறலில்
கொஞ்ச நேரம் நகுங்குகிறது மேசை.

வெளியுலகின் காற்று வாங்கிக்
குளிர்ந்து போய்விடுகிறது இதயம்

அப்போது
விட்ட இடத்திலிருந்து என்னுடைய
கவிதையைத் தொடங்குகிறேன்

இன்றையைப் போல
என்றைக்கும் ஒரு கவிதைக்காக
நான் உழன்றது கிடையாது
வெளியில்
நெடுநாளாய் அலைந்தது இக் கவிதை

அதனுடைய ஆரம்பமே
ஒரு கேள்விதான்
கொல்லப்பட்ட நண்பர்களைப் பற்றி
காணாமல் போன நண்பர்களைப் பற்றிய
ஒரு பெரிய கேள்வி அது

கேள்வியில் பிறப்பெடுத்த
இந்தக் கவிதை
திடீரென்று என்னைவிட்டுப் பிரிந்துசெல்கிறது
நெய்யப்படாத வார்த்தைகளுடன்
அறிவால் நெறிப்படுத்தப் படாத
மிகையுணர்ச்சியும் சேர்ந்து
பிரவாகம் எடுக்க
இந்தக் கவிதை பிரிந்து செல்கிறது

பௌர்ணமி நிலவிலும்
ஒளி தோயாமல் இருளில் கிடக்கிற
அந்த மாடி வீட்டைச் சுற்றி வருகிறது
இறுகப் பூட்டப்பட்டிருக்கும்
அதனுடைய பழங்காலக் கதவின்மீது
மூர்க்கமாக மோதுகிறது
இறுகிய யன்னல்களுக்கு அருகே சென்று
உன்னிப்பாகக் கேட்கிறது

வெளிச் சுவரில் தெறித்திருக்கும்
குருதிச் சுவட்டருகில் நின்று உருகிறது
வீட்டின் வெளிப்புறம்
ஓங்கிய மரங்களில்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
அவலக் குரல்களில் தேடுகிறது
இரவுகளில்
கடற்கரையில் காலடிச் சுவடுகளைப்
பின்தொடர்ந்து செல்கிறது
தாழம் புதர்களுள் ஒளிந்திருந்து
குருதியில் நனைகிறது

அலைகளுக்கு மேல் அலைகிறது
அவை புரட்டிவிடும் உடல்களைத்
திருப்பித் திருப்பித் தேடுகிறது
கண்கள் இல்லா உடல்களுக்குக்
கண்களையும்
முகம் சிதைந்த உடல்களுக்கு
முகங்களையும் தேடிச் சினக்கிறது

தெருவில் வீசப்பட்டுள்ள
ஒற்றைச் செருப்பின்மீது
வீட்டுப் படிகளில் வீசியெறியப்பட்ட
மூக்குக் கண்ணாடிமீது
தெரு முனையில் புரட்டி விடப்பட்ட
மோட்டார் சைக்கிளின்மீது
தயங்கித் தயங்கி நிற்கிறது

தகப்பன் தொலைந்த பிறகு
பிறந்த குழந்தைகளின்
பளிங்கு போன்ற விழிகளில்
எதிரொலிப்பது என்ன என்று தெரியாமல்
குழம்புகிறது
தாய்மாரின் கண்ணீர்த் துளிகளை
ஏந்திக்கொண்டு செல்கையில்
தலை குப்புற வீழ்கிறது

தூக்கு மரங்களின் கீழ்
புதைகுழிகளின் மேல்
முகாம்களின் கோடிப்புறங்களில்
மேசைமீது இப்போதும்
அப்போது போலவே கிடக்கும்
மூடப்படாத பேனையருகில்
முற்றுப் பெறாத கடித வரிகளில்

சுவரில் தூங்கும் படங்களில்
அறையில் சிந்தியிருக்கும் ஆடைகளில்
பூவாத பூவரசுகளில்
ஈரப் பனையில்
ஓரக் கூந்தலின் ஒற்றை மலரில்

நின்று பம்பரம் போலச் சுழல்கிறது

காற்றிலும் வெளியிலும்
மூடப்பட்ட எல்லா இரும்புக் கதவுகளிலும்
புகை கசியும் எல்லாத் துப்பாக்கிகளிலும்
அறைந்து கேட்கிறது
எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது?

1990.

Cheran Rudhramoorthy, professor in the Department of Sociology and Criminology, University of Windsor, is an academic, poet, playwright, and journalist.

Translated from Tamil to English by Anushiya Ramaswamy, professor in English, Southern Illinois University, Edwardsville, USA.

Image source: https://bit.ly/4hPRvmy

Note

Original poem in Tamil published in: Cheran. (2000). Nee Ippozhuthu Irangum Aaru [The River You Are Now Descending Into]. Nagercoil: Kalachuvadu Publications.

You May Also Like…

Share This